பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற வாய்ப்பு: மொயீன் அலி

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி கூறியுள்ளார்.

News image
Updated On :14 மார்ச் 2023, 12:15 pm

DIN

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மொயீன் அலி, இங்கிலாந்து அணிக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் மட்டுமே விளையாடி வருகிறார். வங்கதேசத்தில் டி20 தொடரில் விளையாடி வரும் மொயீன் அலி ஒரு பேட்டியில் கூறியதாவது:

எனக்குப் பல லட்சியங்கள் கிடையாது. ஆனால் உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியில் இடம்பெறவும் கோப்பையை வெல்லவும் விரும்புகிறேன். அதன்பிறகு பார்க்கலாம். இதனால் நான் ஓய்வு பெறுவேன் என்றோ ஓய்வு பெற மாட்டேன் என்றோ கூறவில்லை. 35 வயதில் அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் என்பதே மிகப் பெரியது. ஏதாவது ஒரு சமயத்தில் இது போதும் என நான் நினைக்கலாம். ஓய்வு பற்றி நான் முடிவெடுக்கவில்லை. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசித்துள்ளேன். புதிய வீரர்கள் அணிக்கு வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அணிக்கு எது முக்கியமோ அதைச் செய்ய வேண்டும். அதுவே நம்மை உலக சாம்பியனாக மாற்றும். டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.