அவர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்துவிட்டால் எங்களுக்கு அதை விட மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை. ஆனால், அவர் அணியில் இடம் பெற முடியாவிட்டால் அந்த தருணத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து அதிகம் சிந்திக்க வேண்டும். முதுகு வலியினால் அணியில் இடம் பெறாமல் இருந்த இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் என நம்புகிறேன். ஜஸ்பிரித் பும்ரா சில நாட்களாக காயம் காரணமாக அணியில் இல்லை. அவர் அணியில் இடம் பெறாதது அணிக்கு பின்னடைவாக இருப்பினும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகின்றனர். அவர்கள் பல ஆட்டங்களில் விளையாடி தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். அந்த அனுபவம் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.