விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் ஆட்டத்தை நேரில் காணும் ரஜினி! (படங்கள்)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் ஆட்டத்தைக் காண பிரபல நடிகர் ரஜினிகாந்த் மும்பை வான்கடே விளையாட்டுத் திடலுக்கு வருகை தந்துள்ளார்.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:32 am

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் ஆட்டத்தைக் காண பிரபல நடிகர் ரஜினிகாந்த் மும்பை வான்கடே விளையாட்டுத் திடலுக்கு வருகை தந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் ஆரம்பமாகிறது. மும்பையில் முதல் ஒருநாள் ஆட்டம் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பாண்டியா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஜடேஜா, குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சாளர்களாகத் தேர்வாகியுள்ளார்கள். ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்குர், பாண்டியா ஆகிய பந்துவீச்சாளர்களும் இஷான் கிஷன், ஷுப்மன் கில், கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் ஆகிய பேட்டர்களும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

ஆஸி. அணியில் அலெக்ஸ் கேரிக்குப் பதிலாக ஜோஷ் இங்க்லிஷ் இடம்பெற்றுள்ளார். காயத்திலிருந்து குணமாகாத டேவிட் வார்னர் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. 

இந்நிலையில் மும்பை வான்கடே விளையாட்டுத் திடலில் நடைபெறும் ஒருநாள் ஆட்டத்தைக் காண நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார். மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவும் ரஜினியும் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே உரையாடும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Thalaiva in the house

The President of Mumbai Cricket Association, Mr. @Amolkk1976 in conversation with the Superstar @rajinikanth during the #INDvAUS game at the Wankhede

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.