ஹைதராபாத்தை வீழ்த்த கடைசி ஓவரில் நாங்கள் செயல்படுத்திய திட்டம் இதுதான்: வருண் சக்ரவர்த்தி

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வெற்றிக்கு  எங்களது இந்தத் திட்டம் தான் காரணம் என அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தை வீழ்த்த கடைசி ஓவரில் நாங்கள் செயல்படுத்திய திட்டம் இதுதான்: வருண் சக்ரவர்த்தி

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வெற்றிக்கு  எங்களது இந்தத் திட்டம் தான் காரணம் என அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார். கடைசி ஓவரில் சன் ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரை சிறப்பாக வீசிய வருண் சக்ரவர்த்தி வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் மூலம், கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பும் தொடர்ந்து வருகிறது. 

இந்த நிலையில், சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வெற்றிக்கு  எங்களது இந்தத் திட்டம் தான் காரணம் என அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மனம் திறந்துள்ளார்.

இது குறித்து வருண் சக்ரவர்த்தி கூறியதாவது: எங்களுக்கு அதிக அளவிலான அழுத்தம் இருந்தது. கேப்டன் நிதிஷ் ராணா என்னிடம் கூறியது ஒன்றே ஒன்று தான். பேட்ஸ்மேன்களை ஆடுகளத்தின் நீளமான பகுதியை நோக்கி பந்தினை அடிக்க செய்யும் வகையில் பந்துவீசுமாறு கூறினார். எங்களது அடிப்படையானத் திட்டம் அதுவாகவே இருந்தது. நாங்கள் இந்த திட்டத்தினை சரியாக செயல்படுத்தினோம்.

மைதானத்தின் நீளமான பகுதியில் பேட்ஸ்மேன்களை அடிக்க வைப்பதற்காக அவர்களது கால்களைச் சுற்றியே பந்து வீசினேன். அவர்கள் எனது பந்தினை சிக்ஸர் அடித்தால் அடித்துக் கொள்ளட்டும் என்றே அவர்களுக்கு சவால் அளிக்கும் விதமாக பந்து வீசினேன். கடைசி ஓவரை வீசும்போது எனது இதயத்துடிப்பு 200-ஐத் தொட்டது. பந்து எனது கைகளில் இருந்து நழுவிக் கொண்டே இருந்தது. மைதானத்தின் நீளமான பக்கத்தில் பேட்ஸ்மேன்களை அடிக்க வைப்பது மட்டுமே எனது ஒரே நம்பிக்கையாக இருந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இனி வரும் போட்டிகள் அனைத்தும் வாழ்வா? சாவா? போட்டிகளாகும். நாங்கள் அதனால் அனைத்துப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com