வெற்றிக்கு விலாசம் கொடுத்த மாமன்னன்: தோனிக்கு ஹர்பஜன் புகழாரம்

வெற்றிக்கு விலாசம் தந்த மாமன்னன் மஹி என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்றைய ஆட்டம் குறித்து ஹர்பஜன் சிங் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“எத்தனை அரசர்கள் இருக்கிறார்கள் என்பதைவிட, எப்படிப்பட்ட அரசன் இருக்கிறார் என்பதே முக்கியம். மஞ்சள் ஆடை சூடிய சந்தன கருப்பு மகேந்திர சிங் தோனி முன் டெல்லி கேப்பிடல்ஸ் மட்டும் தப்ப முடியுமா. வெற்றியை தேடுபவர்களுக்கு மத்தியில்,வெற்றிக்கு விலாசம் கொடுத்த மாமன்னன் மஹி” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை சென்னை அணியின் ரசிகர்களும் கிரிக்கெட் ஆர்வலர்களும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com