கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

என் பெயரில் போலியான விளம்பரம்: வழக்கு தொடுத்த சச்சின்! 

சச்சின் டெண்டுல்கர் பெயரில் போலியான விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால் மும்பை காவல் துறையிடம் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 மே 2023, 8:52 am

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் முகம், பெயர், குரலை போலியாக பயன்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறையிடம் சச்சின் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இது குறித்து மும்பை சைபர் காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர் மீது ஐபிசி 426, 465, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

அதிகாரபூர்வமற்ற பொருள்களை மக்களிடம் விற்க எனது பெயரினை பயன்படுத்துவது கண்டிக்கதக்கதென சச்சின் தெரிவித்துள்ளார். சச்சினின் எஸ்ஆர்டிஎஸ்ஆம் நிறுவனம் இது தொடர்பாக கூறியதாவது: 

சச்சினின் அனுமதியின்றி அவரது பெயரினையிம் குரலினையும் தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். இது மக்களை தவறாக வழிநடத்திவிடும் அபாயமிருக்கிறது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள போலியான விளம்பரம் குறித்து சைபர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.