சிஎஸ்கே பேட்டிங்: புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தை தக்க வைக்குமா?

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
சிஎஸ்கே பேட்டிங்: புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தை தக்க வைக்குமா?

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கான கடைசி லீக் போட்டி இதுவாகும். இந்தப் போட்டியில் நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்குகிறது.

ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த தில்லி கேப்பிடல்ஸ் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் களம் காண்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com