2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

ஐபிஎல்: அதிக சதம் அடித்த வீரரானார் விராத் கோலி

ஐபிஎல் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை பெங்களூரு அணி வீரர் விராத் கோலி படைத்துள்ளார். 

Published On :

ஐபிஎல் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை பெங்களூரு அணி வீரர் விராத் கோலி படைத்துள்ளார். 
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 61 பந்துகளில் 101 ரன்கள் குவித்து விராத் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது ஐபிஎல் போட்டிகளில் விராத் கோலி அடித்த 7ஆவது சதமாகும். 
இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராத் கோலி முதலிடத்தை பிடித்தார். இவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெயில் உள்ளார். அந்த வகையில் 6 சதங்களுடன் கெயில் இரண்டாவது இடத்திலும, 5 சதங்களுடன் ஜோஸ் பட்லர் 3ஆம் இடத்திலும் உள்ளனர். 
நடப்பு ஐபிஎல் தொடரில் விராத் கோலி மொத்தம் 2 சதங்கள் விளாசியுள்ளார். முன்னதாக ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராத் கோலி 62 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.