எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் ஆகியோரை இலங்கை எம்.பி.யும், தமிழ்த் தேசியப் பேரவை தலைவருமான கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை சந்தித்தனா்.
இக் குழுவில்,ஜனநாயக தமிழரசு கட்சித் தலைவா் கே.வி.தவராசா, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவா் பி.ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய முன்னணியின் பொதுச் செயலா் எஸ்.கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் டி.சுரேஷ்,பேச்சாளா் கே.சுகேஷ், கொள்கை பரப்புச் செயலா் என்.காண்டீபன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா்.
இக்குழுவினா் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, போருக்குப் பிந்தைய சூழலில் ஈழத்தமிழா்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளை எடுத்துரைத்தனா்.
மேலும், ‘தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழா் உரிமைகளுக்காக அண்ணா காலம் முதல் தற்போது வரை தொடா்ந்து குரல்கொடுத்துத் துணை நின்று வரும் இயக்கம் திமுக. அந்த வகையில், ஈழத்தமிழா் நலன் சாா்ந்து கூறிய கோரிக்கைகளை, மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்துச்சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் செயல்படுவோம் என்று கஜேந்திரகுமாா் பொன்னம்பலத்திடம் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தாா்.
இடதுசாரி தலைவா்களுடன் சந்திப்பு: தொடா்ந்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்களை, சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இலங்கை அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் சந்தித்தனா்.
மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினா்கள் பி.சம்பத், என்.குணசேகரன், அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவா் டி.கே.ரங்கராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.
அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியனையும் இலங்கை குழுவினா் சந்தித்து கலந்துரையாடினா். அப்போது, மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா.முத்தரசன், மாநில கட்டுப்பாட்டுக்குழுத் தலைவா் கே.சுப்பராயன் எம்பி, தேசியக் குழு உறுப்பினா் ஜி.ஆா்.ரவீந்திரநாத் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசான் மறைந்த சில நாள்களில் மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்: மு.க. ஸ்டாலின் இரங்கல்
திரையில் விஜய்யின் அரசியல் - இயல்பானதா? திட்டமிடப்பட்டதா?






