ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் குஜராத், லக்னெள அணிகளை வென்று சென்னை, மும்பை அணிகள் வரலாற்றை மாற்றியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் கடைசி சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் புதிதாக அறிமுகமானது. குஜராத் அணி கலந்து கொண்ட முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.
இந்நிலையில், 4 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை அணியை கடந்த சீசனில் இரண்டு முறையும், நடப்பு சீசனில் ஒரு லீக் போட்டியிலும் எதிர்கொண்ட குஜராத் அணி 3 முறையும் வெற்றி பெற்றது.
அதேபோல், 5 முறை சாம்பியனான மும்பை அணியை இதுவரை 3 லீக் போட்டிகளில் எதிர்கொண்ட லக்னெள அணி 3 முறையும் வெற்றி பெற்றிருந்தது.
குஜராத்தை சென்னையும், லக்னெளவை மும்பையும் ஐபிஎல் வரலாற்றில் வென்றதில்லை என்ற சூழல் நிலவியது.
இந்நிலையில், இந்த சீசனில் குஜராத், சென்னை, லக்னெள, மும்பை அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
பிளே ஆஃப்பின் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத்தை சென்னை அணியும், எலிமினேட்டர் போட்டியில் லக்னெளவை மும்பை அணியும் வென்று வரலாற்றை மாற்றியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, குஜராத் அணியை கடந்த 2 சீசன்களில் எந்த அணியும் ஆல்-அவுட் செய்ததில்லை என்ற நிலையில், குவாலிஃபையர் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது சென்னை அணி.
சென்னை அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், குஜராத் - மும்பை அணிகள் மோதும் குவாலிஃபையர் இரண்டாம் சுற்றில் வெற்றிபெறும் அணி சென்னை அணியுடன் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பங்குனி மாதப் பலன்கள் - மேஷம்
பங்குனி மாதப் பலன்கள் - ரிஷபம்
பங்குனி மாதப் பலன்கள் - மிதுனம்

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
வீடியோக்கள்

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

