ஆஸ்திரேலியா 286 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா 286 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா  முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இந்த இணை நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. ஹெட் 11 ரன்களிலும், வார்னர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு ரன்களை சேர்த்தது. இருப்பினும், ஸ்டீவ் ஸ்மித் 44  ரன்களில் அடில் ரஷீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோஷ் இங்லிஷ் 3 ரன்களில் ஆட்டமிழக்க, கேமரூன் கிரீன் மற்றும் லபுஷேன் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடியது. டேவிட் வில்லே இந்த  பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். அவர் கேமரூன் கிரீனை 47 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் மார்கஸ் ஸ்டொய்னிஸ் (35 ரன்கள்), பாட் கம்மின்ஸ் (10 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுஷேன் 83 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். 

இறுதியில் 49.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி  286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளைக்  கைப்பற்றினார். மார்க் வுட் மற்றும் அடில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லே மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com