மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம்: வங்கதேச அணி 306 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது. 

News image
Updated On :11 நவம்பர் 2023, 9:24 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது. 

உலகக் கோப்பையின் 42வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம்-ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. புணேவில் நடக்கும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. வங்க தேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தன்சித் ஹசன் - லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். 

இரண்டு பேரும் தலா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன், தௌஹித் ஹிருதாய் இருவரும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தனர். இருப்பினும், நஜ்முல் ஹொசைன் 45 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். ஆனால் தௌஹித் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 79 பந்துகளில் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய வீரர்களில், மஹ்முதுல்லா 32, முஷ்பிகுர் ரஹீம் 21, மெஹிதி ஹசன் 29 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.