உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா ( 47 ரன்கள்), ஷுப்மன் கில் (80 ரன்கள்), விராட் கோலி (117 ரன்கள்), ஸ்ரேயஸ் ஐயர் (105 ரன்கள்) மற்றும் கே.எல்.ராகுல் (39 ரன்கள்) எடுத்து அசத்தினர். இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.
இப்போட்டியில் ரோஹித் சர்மா 4 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் தனிநபர் ஒருவராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். அவர் இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 28 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்
ரோஹித் சர்மா - 28 சிக்ஸர்கள் (2023)
கிறிஸ் கெயில் - 26 சிக்ஸர்கள் (2015)
ஸ்ரேயஸ் ஐயர் - 24 சிக்ஸர்கள் (2023)
இயான் மோர்கன் - 22 சிக்ஸர்கள் (2019)
கிளன் மேக்ஸ்வெல் - 22 சிக்ஸர்கள் (2023)
டேரில் மிட்செல் - 22 சிக்ஸர்கள் (2023)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடி, அமித்ஷா அவசர அழைப்பு... தனி விமானத்தில் தில்லி சென்ற அண்ணாமலை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!!

போர் நிறுத்தம்! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


