இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி காங்கிரஸ் தலைமையகத்தில் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது. இந்தப் போட்டியைப் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் நேரில் கண்டுகளித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: இறுதிப்போட்டியை நேரில் காண வந்த தீபிகா படுகோன்!
இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி காங்கிரஸ் தலைமையகத்தில் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இந்த பெரிய திரையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியைக் காண்கின்றனர். ராஜஸ்தானில் பிரசாரத்தில் ஈபட்டுள்ள காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அங்கு இறுதிப்போட்டியைக் காண்பார்கள் எனத் தெரிகிறது.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி ஆகியோர் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.