உலகக் கோப்பை இறுதிப்போட்டியை இந்திய ரசிகர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் எனப் பலரும் கண்டுகளித்து வருகின்றனர்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் கண்டுகளித்து வருகின்றனர். அந்த வரிசையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் இணைந்துள்ளனர்.
அகமதாபாதில் நடைபெறும் போட்டியைக் காண வந்த இருவரும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்திருந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வரும் விடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் தீபிகா படுகோன் அவரது தந்தையுடன் வருவது பதிவாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இந்த இறுதிப்போட்டியை காண மேலும் பல பிரபலங்கள் வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி: டிரம்ப்

அமெரிக்கா சென்றார் மத்திய வெளியுறவுச் செயலாளர்! டிரம்ப்பின் இந்திய பயணத்துக்கு ஏற்பாடு?

திருவண்ணாமலை என்றாலே திமுக மலை: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!
வீடியோக்கள்
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

