பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கு பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்களை அந்நாட்டு கிரிக்கெட்  வாரியம்  நியமித்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கு பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்களை அந்நாட்டு கிரிக்கெட்  வாரியம்  நியமித்துள்ளது.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்த நிலையில், இந்த இரு நாட்டுத் தொடர்களுக்கும் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்களை  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளாரான உமர் குல் மற்றும்  சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சையீத் அஜ்மல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

2009 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் அங்கம் வகித்த உமர் குல் ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். அதேவேளையில், சையீத் அஜ்மல் பாகிஸ்தானின் பயிற்சியாளராக முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இருவருக்கும்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள (டிசம்பர் 14 முதல் ஜனவரி 7 வரை) டெஸ்ட் தொடருக்கும், நியூசிலாந்துக்கு எதிரான (ஜனவரி 12 முதல் 21 வரை) டி20 தொடருக்கும் பாகிஸ்தான் அணியை தயார் படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முகமது ஹஃபீஸ் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com