மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 1,350க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள், துப்பாக்கிச்சூடு, வில்வித்தை, கால்பந்து, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் போட்டி என மொத்தம் 7 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து அமைச்சர் அனுராக் தாக்குர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பதாவது, “நாட்டில் முதன்முறையாக கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புதுதில்லியில் இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்தின் 3 திடல்களில் மொத்தம் 7 பிரிவுகளில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் திருப்புமுனையாக அமையும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
With great joy and satisfaction, I'm pleased to announce that the first edition of Khelo India Para-Games will be held from 10 to 17 December in New Delhi.
â Anurag Thakur (@ianuragthakur) November 22, 2023
With over 1350 participants from across 32 states and UT's participating in 7 disciplines, it is going to be a⦠pic.twitter.com/Z7j2tYvG4s
தில்லியில் உள்ள ஐஜி திடல், துக்ளகாபாத் மற்றும் ஜேஎல்என் திடலில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்சௌவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஜொலித்த நட்சத்திர வீரர், வீராங்கனைகளான ஷீடால் தேவி, பாவினா பட்டேல், ஏக்தா பியான், நீரஜ் யாதவ், சிங்ராஜ், மணீஷ், சோனல், ராகேஷ் குமார் மற்றும் சரிதா ஆகியோர் தங்களுடைய சொந்த மாநிலங்கள் தரப்பில் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழ்பவானி வாய்க்காலில் வரும் 15-ஆம் தேதி தண்ணீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை
சாராயம் கடத்தியவா் கைது

விழுப்புரம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய செவிலியா்கள்

காா் கவிழ்ந்து விபத்து: முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



