6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2-வது டி20: ஆஸ்திரேலியா பந்துவீச்சு; அணியில் 2 மாற்றங்கள்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2023, 1:13 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5  போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்த நிலையில்,  இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுத் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது.

ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிளன் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஸாம்பா இன்றையப் போட்டியில் விளையாடுகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரையில், எந்த ஒரு மாற்றமுமின்றி முதல் டி20 போட்டியில் களமிறங்கியே அதே அணியுடன் களம் காண்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.