ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. அதில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 55.68 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதையும் படிக்க: உயரம் தாண்டுதலில் இந்தியா புதிய சாதனை!
இந்த தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 54.45 விநாடிகளில் இலக்கை எட்டி பஹ்ரைன் வீராங்கனை முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தையும், 55.01 விநாடிகளில் இலக்கை எட்டி சீன வீராங்கனை இரண்டாவது இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் நான்காவது இடத்தில் இருந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் சிறப்பாக செயல்பட்டு மூன்றாமிடத்துக்கு முன்னேறி வெண்கலப் பதக்கத்தை வென்றார். தமிழக வீராங்கனையான வித்யா ராம்ராஜ் கோவையைச் சேர்ந்தவர் ஆவார்.
இதையும் படிக்க: நட்பே துணை: விராட் கோலியின் பேட்டினால் சதம் விளாசிய ஸ்மித்!
ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.