ஆசிய விளையாட்டுப் போட்டி: வில்வித்தையில் தங்கம் வென்று புதிய சாதனை!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 12 ஆவது நாளான புதன்கிழமை, கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் தென் கொரியா அணியை வீழ்த்தி தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது இந்தியா. 
ஆசிய விளையாட்டுப் போட்டி: வில்வித்தையில் தங்கம் வென்று புதிய சாதனை!
Published on
Updated on
1 min read

ஹாங்ஸெள: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 12 ஆவது நாளான புதன்கிழமை, கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் தென் கொரியா அணியை வீழ்த்தி தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது இந்தியா. 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் தென் கொரியாவின் சேவோன் சோ மற்றும் ஜேஹூன் ஜூவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், இந்தியாவுக்கான ஜோதி சுரேகா, ஓஜாஸ் இணை 159-158 என்ற புள்ளி கணக்கில் தென் கொரியா அணியை வீழ்த்தி தங்கம் வென்று புதிய சாதனை படைத்தனர்.

தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தைக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும். இந்தியா தற்போது 71 பதக்கங்களை பெற்றுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் முதல் தங்கம் வென்ற இந்திய வில்வித்தை வீரர்கள் ஜோதி வென்னம் சுரேகா மற்றும் பிரவின் ஓஜஸ் ஆகியோருக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: 

"இந்தியாவுக்கான சாதனைப் பதக்கம்!! ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 இல் கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் முதல் தங்கம் வென்ற இந்திய வில்வித்தை வீரர்கள் ஜோதி வென்னம் சுரேகா மற்றும் பிரவின் ஓஜஸ் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தங்களின் அற்புதமான செயல்திறன் உண்மையில் பாராட்டத்தக்கது. நமது தேசத்திற்கு மகத்தான பெருமையைக் கொண்டுவருகிறது. இந்த தங்கப் பதக்கத்தின் மூலம், இளம் விளையாட்டு வீரர்கள் நேர்மையுடன் தங்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த ஊக்குவிக்கும். வரலாற்று சாதனைகளை புரிந்து வரும் அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுகளும் வணக்கம்! என தாக்கூர் தெரிவித்துள்ளார். 

ஆடவர் கபடி போட்டி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் புதன்கிழமை, ஆடவர் கபடி போட்டியின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் 63- 26 என்ற கணக்கில் தாய்லைந்தை வென்றது.

நாளை சீன தைபே உடன் இந்தியா மோதுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com