அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து 

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image
Updated On :14 அக்டோபர் 2023, 5:15 am

DIN

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் விளையாடின. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, வங்கதேசம் முதலில் பேட் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹாசன் களமிறங்கினர். லிட்டன் தாஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தன்சித் ஹாசன் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

அதன்பின் களமிறங்கிய மெஹிதி ஹாசன் மிராஸ் 30 ரன்களிலும், நஜ்முல் ஹொசைன் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால்  வங்கதேசம் 56 ரன்களுக்கு 4  விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தபிகூர் ரஹீம் அணியை சரிவிலிருந்து ஓரளவுக்கு மீட்டனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருப்பினும், ஷகிப் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹீம் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 75 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2  சிக்ஸர்கள் அடங்கும். 

அதன்பின் களமிறங்கியவர்களில் மஹ்மதுல்லா தவிர மற்றவர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. மஹ்மதுல்லா 49 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் லாகி ஃபெர்க்யூசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிரெண்ட் போல்ட்  மற்றும் மாட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிளன் பிளிப்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 9 ரன்களில் வெளியேற அடுத்த வந்த கேன் வில்லியம்சன் சிறப்பாக ஆடினார். இருப்பினும் கான்வே 45 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து களம் புகுந்த மிட்செல் ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிலைத்து ஆடிய வில்லியம்சன் 78 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 42.5 பந்துகளில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய மிட்செல் 67 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் பிலிப்ஸும் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.