ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பாக். எதிரான போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் தேர்வு! 

மிகவும் எதிர்பார்ப்பு மிகுந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

News image
Updated On :14 அக்டோபர் 2023, 8:19 am

DIN

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகுந்த எதிா்பாா்ப்பு உள்ள, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், அகமதாபாதில் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் இரு அணிகளுமே, அவற்றில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. எனினும் நெட் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

இந்திய அணியில், டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டிருக்கும் ஷுப்மன் கில் இந்த ஆட்டத்தில் களம் காண்பாரா என்பது முக்கியமான கேள்வியாக இருந்தது. 

டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்.  

இஷான் கிஷனுக்குப் பதிலாக ஷுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ளார் என ரோஹித் சர்மா கூறியுள்ளார். அஸ்வின் இல்லை; ஷர்துல் தாக்குர் இருக்கிறார். கடந்தப் போட்டியில் விளையாடிய அதே இந்திய அணி. 

பாகிஸ்தான்  அணியில் மாற்றமில்லை. 

இந்தியா: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கே.எல்.ராகுல், ஹார்திக் பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ். 

பாகிஸ்தான்: அப்துல்லால் ஷபீக், இமாம் உல் ஹக், பாபர் அசாம், ரிஸ்வான், சௌத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹாசன் அலி, ஷாகீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரௌப். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.