ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி மிகப் பெரிய பின்னடைவு: இங்கிலாந்து கேப்டன்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி இங்கிலாந்துக்கு மிகப் பெரிய பின்னடைவு என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி மிகப் பெரிய பின்னடைவு: இங்கிலாந்து கேப்டன்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி இங்கிலாந்துக்கு மிகப் பெரிய பின்னடைவு என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் தில்லியில் நேற்று (அக்டோபர் 16) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடைக்கும்  முதல் வெற்றி இதுவாகும். 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி இங்கிலாந்துக்கு மிகப் பெரிய பின்னடைவு என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் ஏற்கனவே கூறியது போல நாங்கள் இதுபோன்று உலகக் கோப்பைத் தொடரை தொடங்க நினைக்கவில்லை. ஆனால், இந்த சூழ்நிலையில் நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியக் கட்டாயத்தில் உள்ளோம். இந்த நெருக்கடியில் இருந்து கண்டிப்பாக மீண்டு வருவோம். உண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி இங்கிலாந்துக்கு  மிகப் பெரிய பின்னடைவு. எங்களிடம் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com