தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகள்!

2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 அக்டோபர் 2023, 10:44 am

DIN

உலகின் விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

1896-ஆம் ஆண்டு முதன்முதலாக கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. அடுத்த தொடரான 1900-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கிரிக்கெட் விளையாட்டு நீக்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட்டை மீண்டும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து கொண்டே இருந்தது.

அதன் விளைவாக, தற்போது கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2028-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பரிந்துரைப் பட்டியலில் கிரிக்கெட் மட்டுமின்றி பிளாக் கால்பந்து, ஸ்குவாஷ், பேஸ்பால், சாப்ட்பால் ஆகிய விளையாட்டுகளும் இருந்தன. 

இந்நிலையில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகளும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. 

கடைசியாக நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.