ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விரைவில் எட்டிப்பிடிக்க உள்ளார் விராட் கோலி.
இதுவரை 452 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அதில் 49 சதங்கள் அடித்து உலகளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் 273 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 48 சதங்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நெருங்கியுள்ளார். இன்னும் ஒரேயொரு சதமடித்தால் சச்சினின் சாதனையை சமன் செய்துவிடுவார். மேலும் ஒரு சதமடித்தால் சச்சினை இரண்டாமிடத்திற்கு பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு வந்துவிடுவார்.
இதையும் படிக்க: இந்தியாவின் மிக உயரமான தேசியக் கொடியை ஏற்றினார் நிதின் கட்கரி!
இதுவரை 47 சதங்கள் எடுத்திருந்த விராட் கோலி நேற்று (அக்டோபர் 19) நடைபெற்ற வங்காள தேசத்துடனான போட்டியில் 103 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 48வது சதத்தை பதிவு செய்தார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களிலும் இந்தியர்களே உள்ளனர். முதலிடத்தில் சச்சின், இரண்டாம் இடத்தில் விராட் கோலி ஆகியோரைத் தொடர்ந்து 247 ஆட்டங்களில் விளையாடி 31 சதங்களுடன் ரோகித் சர்மா மூன்றாம் இடத்தில் உள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் மற்றும் இலங்கை வீரர் ஜெயசூர்யா ஆகியோர் இருக்கின்றனர்.