
கடந்த அக்.5ஆம் தேதி முதல் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் லீக் போட்டியில் 19வது போட்டியாக இலங்கை- நெதர்லாந்து அணிகள் மோதகின்றன. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நெதர்லாந்து அணியில் மாற்றமில்லை. இலங்கை அணியில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா அபார வெற்றி!
நெதர்லாந்து அணி 9.5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் விக்ரமஜித் சிங் 4 ரன்களில் ரஜிதா ஓவரில் போல்ட் ஆனார்.
இதையும் படிக்க: மருத்துவமனையில் நடிகை சுனைனா: ரசிகர்கள் அதிர்ச்சி!
தற்போது மேக்ஸ் டோட் (16)- கோலின் ஆக்கர்மன்(24) விளையாடி வருகிறார்கள்.
இலங்கை அணி 3 போட்டிகளிலும் தோல்வியுற்று கடைசி இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியாலாவது முதல் வெற்றியை பெறுமா என இலங்கை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.