இங்கிலாந்து அணி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பையில் இது இங்கிலாந்தின் மூன்றாவது தோல்வி இதுவாகும்.
இதையும் படிக்க: நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம்: இந்திய அணியில் 2 மாற்றங்கள்
இந்த நிலையில், இங்கிலாந்து அணி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது: இங்கிலாந்து தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்து வருகிறார்கள். இங்கிலாந்து அணியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மூன்று மாற்றங்கள் அவர்கள் வழக்கமாக விளையாடுவதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாக பென் ஸ்டோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், டாஸ் வென்ற பிறகு இங்கிலாந்து எடுத்த முடிவு எனக்குப் பிடிக்கவில்லை.இங்கிலாந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இங்கிலாந்து தரமான ஆட்டத்தைக் கொடுக்கத் தவறி விட்டது. உலகக் கோப்பைக்கான போட்டியில் நிலைத்திருக்க இங்கிலாந்து அணிக்கு 7 வெற்றிகள் வேண்டும். ஆனால், இங்கிலாந்து அந்த நிலையில் தற்போது இல்லை. இனிவரும் போட்டிகளில் இங்கிலாந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இங்கிலாந்து அணி நம்பிக்கையின்றி இருப்பது போல தோன்றுகிறது என்றார்.
இங்கிலாந்து தனது அடுத்தடுத்தப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 போ் கைது

சட்டப் பேரவைத் தோ்தல் எதிரொலி: ரயில்களில் பணம், பரிசுப் பொருள்கள் கடத்துவதை தடுக்க தீவிர சோதனை

உத்தரகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்: 5 அமைச்சா்கள் பதவியேற்பு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

