இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; அணியை வழிநடத்தும் மூத்த வீரர்!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை அந்த அணியின் மூத்த வீரர் மேத்யூ வேட் வழிநடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; அணியை வழிநடத்தும் மூத்த வீரர்!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை அந்த அணியின் மூத்த வீரர் மேத்யூ வேட் வழிநடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில்  5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் நவம்பர் 23 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு மேத்யூ வேட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணி தேர்வுக் குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்திருப்பதாவது: மேத்யூ வேட் இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியிருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான கேப்டன் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மிட்செல் மார்ஷுக்கு கிடைத்த வாய்ப்பினைப் போன்று இந்த வாய்ப்பு மேத்யூ வேடின் சர்வதேச தலைமைப் பொறுப்பிற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் உலகக் கோப்பை முடிவடைந்தவுடன் நாடு திரும்புகின்றனர். ஆனால், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவில் தங்க உள்ளனர் என்றார்.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி: மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரண்ட்ராஃப், சீன் அபாட், டிம் டேவிட், நாதல் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளன் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டொய்னிஸ், டேவிட் வார்னர் மற்றும் ஆடம் ஸாம்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com