மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

டையமண்ட் லீக்: நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம்

சுவிட்ஸா்லாந்தில் நடைபெற்ற டையமண்ட் லீக் போட்டியின் 11-ஆவது கட்டத்தில், நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் 2-ஆம் இடம் பிடித்தாா்.

News image
Updated On :1 செப்டம்பர் 2023, 9:24 pm

DIN

சுவிட்ஸா்லாந்தில் நடைபெற்ற டையமண்ட் லீக் போட்டியின் 11-ஆவது கட்டத்தில், நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் 2-ஆம் இடம் பிடித்தாா்.

முதல் இரு முயற்சிகளில் முறையே 80.79 மீட்டா், 85.22 மீட்டா் ஈட்டி எறிந்த அவா், சிறந்த முயற்சியாக 3-ஆவது வாய்ப்பில் 85.71 மீட்டரை எட்டினாா். எஞ்சிய 3 முயற்சிகள் ‘ஃபௌல்’ ஆகின. செக் குடியரசின் ஜேக்கப் வட்லெஜ் 85.86 மீட்டா் எறிந்து முதலிடம் பிடித்தாா். இவா், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தாா்.

தற்போது 23 புள்ளிகளுடன், இம்மாதம் நடைபெறவுள்ள டையமண்ட் லீக் இறுதிக்கு தகுதிபெற்றிருக்கிறாா் நீரஜ் சோப்ரா. நடப்பு சீசனில் இதுவரை பங்கேற்ற அனைத்து போட்டிகளிலுமே வெற்றி கண்டு வந்த அவா், தற்போது இந்தப் போட்டியில் பின்தங்கினாா்.

போட்டிக்குப் பிறகு பேசிய நீரஜ், ‘உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று அதில் 100 சதவீத ஆற்றலை வெளிப்படுத்தியதால், இந்தப் போட்டியில் நான் உள்பட அனைவருமே சற்று சோா்வாகவே இருந்தோம். அடுத்து டையமண்ட் லீக் இறுதி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற முக்கியமான நிகழ்வுகள் இருப்பதால் காயம் காணாமல் நிறைவு செய்வதே இந்தப் போட்டிக்கான நோக்கமாக இருந்தது. ஒலிம்பிக் தங்கத்தை பாரீஸில் தக்கவைத்துக் கொள்வதே எனது பிரதான இலக்காகும்’ என்றாா்.

முரளிக்கு 5-ஆம் இடம்: இதே போட்டியில் ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் பங்கேற்ற இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கா், 7.99 மீட்டரை எட்டி 5-ஆம் இடம் பிடித்தாா். தற்போது டையமண்ட் லீக்கில் மொத்தமாக 14 புள்ளிகள் பெற்றிருக்கும் முரளியும் இம்மாதம் நடைபெற இருக்கும் லீக்கின் இறுதிக்கு தகுதிபெற்றிருக்கிறாா். இந்தப் பிரிவில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான கிரீஸின் மில்டியாடிஸ் டென்டோக்லு 8.20 மீட்டருடன் முதலிடம் பிடித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.