மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான  டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

News image
படம் | ட்விட்டர்
Updated On :2 செப்டம்பர் 2023, 1:42 pm

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான  டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்கரம் 49 ரன்கள் குவித்தார். 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 14.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. டி20 தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்து மிட்செல் மார்ஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.