சச்சின் சாதனையை முறியடித்த வார்னர்! 

பிரபல ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். 
படம்: ட்விட்டர் | கிரிக்கெட் ஆஸ்திரேலியா
படம்: ட்விட்டர் | கிரிக்கெட் ஆஸ்திரேலியா

தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 9) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுஷேனின் அசத்தலான சதங்களால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தன. 

அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா 41.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 5 போட்டிகளில் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது ஆஸி. அணி.

144 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 6136 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நேற்றைய சதத்தின் மூலம் தனது 20வது ஒருநாள் சதத்தினை நிறைவு செய்துள்ளார். தொடக்க வீரராக மொத்தம் 46 சதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 முறையே 25,20,1 என அடித்துள்ளார். 

இந்த சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். தொடக்க வீரராக சச்சின் 45 சதங்கள் அடித்திருந்த சாதனையை டேவிட் வார்னர் முறியடித்துள்ளார். 

சிறந்த தொடக்க வீரராக மட்டுமின்றி சிரந்த ஒருநாள் வீரராகவும் டேவிட் வார்னர் உள்ளதாக கேப்டன் மிட்செல் மார்ஷ் சமீபத்தில் புகழ்ந்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com