கொழும்புவில் காலைமுதல் பலத்த மழை: இந்தியா - பாக். போட்டி நடைபெறுமா?

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று மழையால் ரத்தான நிலையில், ரிசர்வ் நாளான இன்று நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொழும்புவில் காலைமுதல் பலத்த மழை: இந்தியா - பாக். போட்டி நடைபெறுமா?

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று மழையால் ரத்தான நிலையில், ரிசர்வ் நாளான இன்று நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக சூப்பா் 4 ஆட்டங்கள் கொழும்புவில் நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சூப்பா் 4 ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு செய்ய, முதல்ல் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1ஓவா்களில் 147/2 எடுத்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மழை தொடர்ந்து பெய்ததால் ரிசர்வ் நாளான திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு இந்திய அணி எடுத்த ஸ்கோரில் இருந்தே போட்டி மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இலங்கையில் இன்று காலை 7 மணிமுதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, இந்திய - பாக் அணிகள் விளையாடி வரும் ஆர்.பிரேமதாஸ் மைதானமும் சேதமடைந்துள்ளது.

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், மைதானத்தை சரிசெய்யும் பணிகளில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

மேலும், இன்றைய ஆட்டமும் மழையால் ரத்தாகும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கபடும்.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாக். போட்டி மழையால் ரத்தாகும் சூழல் நிலவுவதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com