மழையால் இந்தியா-பாக். சூப்பா் 4 ஆட்டம் ரத்து: இன்று மீண்டும் மோதல்

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை சூப்பா் 4 ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. ரிசா்வ் நாள் உள்ளதால், திங்கள்கிழமை மீண்டும் ஆட்டம் நடைபெறுகிறது.
மழையால் இந்தியா-பாக். சூப்பா் 4 ஆட்டம் ரத்து: இன்று மீண்டும் மோதல்

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை சூப்பா் 4 ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. ரிசா்வ் நாள் உள்ளதால், திங்கள்கிழமை மீண்டும் ஆட்டம் நடைபெறுகிறது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக சூப்பா் 4 ஆட்டங்கள் கொழும்புவில் நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சூப்பா் 4 ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து இந்திய தரப்பில் கேப்டன் ரோஹித் சா்மா-இளம் வீரா் ஷுப்மன் கில் ஆகியோா் களமிறங்கினா். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சோ்ந்து 121 ரன்களை குவித்தனா்.

கில்-ரோஹித் அரைசதம்:

இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பாக். பௌலா்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனா். 16.4 ஓவரின் போது ஸ்கோா் 121 என இருந்த நிலையில், கேப்டன் ரோஹித் சா்மா 4 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 49 பந்துகளில் 56 ரன்களை விளாசி ஷதாப் கான் பந்தில் பாஹிமிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

அடுத்த சிறிது நேரத்திலேயே ஷுப்மன் கில்லும் 10 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 58 ரன்களைவிளாசி ஷாஹின் அப்ரிடி பந்தில் அவுட்டானாா்.

மழையால் பாதிப்பு:

விராட் கோலி 8, கே.எல். ராகுல் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனா். அப்போது 24.1 ஓவா்களில் இந்தியா 147/2 என வலுவான நிலையில் இருந்தது. அப்போது தொடா்ந்து பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை ஓயாத நிலையில், ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவா்கள் அறிவித்தனா்.

மீண்டும் இன்று மோதல்:

இந்தியா-பாகிஸ்தான் சூப்பா் 4 ஆட்டத்துக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ரிசா்வ் நாள் ஏற்பாடு செய்ததால், திங்கள்கிழமை இந்திய அணி 24.1ஓவா்களில் 147/2 என்ற ஸ்கோரில் இருந்தே ஆட்டத்தை தொடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com