இலங்கை, கொழும்புவில் பிறந்த துனித் வெல்லாலகே சிறந்த இடதுகை சுழல் பந்து வீச்சாளர். இலங்கை அணியில் 19 வயதிலேயே தகுதி பெற்றுள்ளார். 19வயதிற்கு குறைவானவர்கள் பங்கேற்கும் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். 2022 யு-19இல் அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக துனித் வெல்லாலகே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஜூன்14,2022இல் முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். ஜூலை 24இல் டெஸ்டிலும் அறிமுகமானார்.
ஆசியக் கோப்பை அணியிலும் தேர்வான துனித் வெல்லாலகே சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான இன்றைய (செப்.12) போட்டியில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்களான கில், ரோஹித், விராட் கோலி ஆகியோரது விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

தற்போது கே.எல்.ராகுல், ஹார்திக் பாண்டியா விக்கெட்டினையும் எடுத்து அசத்தியுள்ளார். 10 ஒவருக்கு 5 விக்கெட்டுகள் 1 ஓவர் மெய்டன் செய்து 40 ரன்கள் கொடுத்துள்ளார். இந்திய அணி 36 ஓவர் முடிவில் 172/6 ரன்கள் எடுத்துள்ளது.
இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் திடீரென பிரபலமாகியுள்ளார். ஏற்கனவே சிஎஸ்கே அணியில் பதிரானா, தீக்ஷனா ஆகியோர் விளையாடி வருகிறார்கள்.
துனித் வெல்லாலகே 2024 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றால் நிச்சயமாக அவரை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டிப்போடும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு தனித்தீர்மானம்: தமிழக எம்.பி., எம்எல்ஏக்கள் மத்திய அரசிடம் நேரில் வழங்க வேண்டும்

நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்!

விஜய், நல்ல நடிகர் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு நல்ல தலைவன், நல்ல மனிதனும்கூட!

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



