படம்: ட்விட்டர் (எக்ஸ்)
படம்: ட்விட்டர் (எக்ஸ்)

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை கொண்டாடிய ஜம்மு-காஷ்மீர் மக்கள்! (விடியோ) 

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 
Published on

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

விராட் கோலி-ராகுலின் அதிரடி சதங்களால் இந்தியா 356/2 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய பாக். அணி குல்தீப் யாதவ் பௌலிங்கில் சுருண்டு 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை கொண்டாடிய ஜம்மு காஷ்மீர் மக்களின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தற்போது, இந்தியா அணி இலங்கையுடன் விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com