தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா விலகியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியின்போது நசீம் ஷாவின் வலது தோளில் காயம் ஏற்பட்டது. அதனால், அவர் இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா விலகியுள்ளார். அதனால், இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் அவர் அணியில் இல்லாதது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை பெற பிரத்யேக ஏடிஎம் கார்டு!
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாவது: ஆசியக் கோப்பை தொடரில் நசீம் ஷாவுக்குப் பதிலாக 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் வலது கை வேகப் பந்துவீச்சாளர் ஸாமன் கான் இணைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இன்றையப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.