இந்தியாவுக்கு எதிரான 18 பேர் கொண்ட ஆஸி. அணி அறிவிப்பு! 

இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கான ஆஸி. அணியை அறிவிக்கப்பட்டுள்ளது. 
படம்: ட்விட்டர் | ஐசிசி
படம்: ட்விட்டர் | ஐசிசி

உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவுடன் ஆஸி. அணி ஒருநாள் தொடரில் மோதுகிறது. இதில் முக்கியமான வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளார்கள். காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் முக்கிய வீரர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • கேப்டன் பாட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஸ்மித் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளார்கள். 
  • அஸ்டன் அகர், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.
  • மாட் ஷார்ட், ஸ்பென்செர் ஜான்ஸன் ஆகியோர் முதன்முதலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

18 பேர் கொண்ட ஆஸி. அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்பாட், அலெக்ஸ் கைரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஸ் ஹேசல்வுட், ஜோஸ் இங்கிலிஸ், மாட் ஷார்ட், ஸ்பென்செர் ஜான்ஸன், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா. 

செப்.22ஆம் தேதி வரை உலகக் கோப்பை அணியில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என ஐசிசி தெரிவித்துள்ளதால் ஆஸி. அணிக்கு இன்னும் நேரமிருக்கிறது. அதற்குள்ளாக டிராவிஸ் ஹெட் நிலைமை குறித்து அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிரது. மேலும் லபுஷேன் இருக்கிறாரா என்பதும் தெரியவரும். 

செப்.22, செப்.24, செப்.27 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com