37வது பிறந்தநாள்: அஸ்வினின் சாதனைப் பட்டியல்! 

தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வினின் 37வது பிறந்தநாளில் அவரது சாதனைகளைப் பார்க்கலாம். 
37வது பிறந்தநாள்: அஸ்வினின் சாதனைப் பட்டியல்! 

ஐபிஎல் 2009இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்முதலாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்திய அணியில் ஒருநாள், டி20 போட்டிகளில் 2010இல் தேர்வானார். டெஸ்டில் 2011இல் களமிறங்கினார். 

சிஎஸ்கே அணியில் 6 ஆண்டுகள் இருந்த அஸ்வின் பல மறக்க முடியாத இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இந்திய அணியில் சிறந்த சுழல்பந்து வீச்சாளராக திகழ்கிறார். சிறந்த ஐசிசி பௌலர், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிரண்டு இடங்களை பிடித்து அசத்தியுள்ளார். 

  • 94 டெஸ்டில் விளையாடியுள்ள அஸ்வின் 3,185 ரன்களும் 489 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்களும் 14 அரைசதங்களும் அடங்கும். 
  • 24 முறை 4 விக்கெட்டுகள், 34 முறை 5 விக்கெட்டுகள்,  8 முறை 10 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். 
  • சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அஸ்வின் 619 விக்கெட்டுகளுடன் 9வது இடத்தில் இருக்கிறார். 
  • இந்தியாவில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் கும்ப்ளே 953 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும் அஸ்வின் 709 விக்கெட்டுகளுடன் 2ஆம் இடத்திலும் இருக்கிறார். 
  • டெஸ்டில் 10 முறை தொடர் நாயகன் விருது வாங்கி இரண்டாமிடத்தில் இருக்கிறார். 
  • வேகமாக 250,300,350 விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 
  • ஐபிஎல் போட்டிகளில் 171 விக்கெட்டுகள் எடுத்து 5வது இடத்தில் இருக்கிறார். 

அஸ்வின் இந்த சாதனைகள் மட்டுமின்றி அவரது சமயோசிதமான கிரிக்கெட் செயல்பாடுகளுக்கு பெயர்போனவர். மன்கட் ரன் அவுட்டை நடைமுறைப் படுத்துவதில் அஸ்வின் செய்தது  தனிப் புரட்சி எனலாம். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் என அஸ்வின் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்து முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் உள்பட பலரும் இந்திய தேர்வுக்குழு மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அஸ்வினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com