
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று (செப்டம்பர் 17) நடைபெறுகிறது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
மழையின் காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. 4வது ஓவர் வீசிய சிராஜ் ஓவரில் முதல் பந்தில் நிசாங்கா ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான 18 பேர் கொண்ட ஆஸி. அணி அறிவிப்பு!
அடுத்து 3,4வது பந்துகளில் சமரவிக்ரமா, அசலங்கா ஆட்டமிழந்தனர். அடுத்து கடைசிப் பந்திலும் தன்ஞ்செயாவும் டக்கவுட் ஆனார். 4 வீரர்கள் ரன்னேதுமின்றி ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
4வது ஓவர்: விக்கெட், ரன் இல்லை, விக்கெட், விக்கெட், பவுண்டரி, விக்கெட்.
அடுத்து 6வது ஓவர் வீசிய சிராஜ் ஓவரில் இலங்கை கேப்டன் ஷானகா போல்ட்டானார். நிசாங்கா-2 ரன்கள், தனஞ்செய டி செல்வா-4 ரன்கள், குசால் பெராரே- 0, அசலங்கா-0, சதீரா சமரவிக்ரமா-0, ஷானகா-0.
இதையும் படிக்க: 37வது பிறந்தநாள்: அஸ்வினின் சாதனைப் பட்டியல்!
6 ஓவர் முடிவில் இலங்கை அணி 13/6 ரன்கள் எடுத்துள்ளது. சிராஜ் 5 விக்கெட்டுகளும் பும்ரா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.