ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று (செப்டம்பர் 22) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. 115 புள்ளிகளுடன் பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும், 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இதையும் படிக்க: நடு இரவில் பேட்டிங் பயிற்சி செய்த அஸ்வின்! (விடியோ)
டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் இருக்கும் நிலையில், தற்போது ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையிலும் இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம், டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வடிவிலான போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இந்தியா முதலிடம் பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.
ஆடவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அனைத்து வடிவிலான போட்டிகளின் தரவரிசையிலும் முதல் இடம் பிடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி அனைத்து வடிவிலான போட்டிகளின் தரவரிசையிலும் முதலிடம் பெற்றிருந்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 24) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆனி மாத கடைசி நாளில் (ஜூலை 16) பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்!

மோட்டோ எட்ஜ் 70 மேக்ஸ் அறிமுகம்! என்னென்ன சிறப்பம்சங்கள்?

இதயம் முரளி படத்தின் காமெடி ஸ்னீக் பீக் விடியோ வெளியீடு!

மக்களின் அன்பு மழையில்... மாவீரன் படத்தின் மூன்றாம் ஆண்டு சிறப்பு விடியோ!
விடியோக்கள்

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3



