தோனியைவிட பெட்டரா ஒன்னு இல்லப்பா: ஹர்பஜன் சிங்
By DIN | Published On : 24th April 2023 11:06 AM | Last Updated : 24th April 2023 11:06 AM | அ+அ அ- |

இந்த உலகத்தில் தோனியைவிட சிறந்தது ஒன்னும் இல்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்றைய ஆட்டம் குறித்து ஹர்பஜன் சிங் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
“இந்த உலகத்துல ஒன்னைவிட ஒன்னு பெட்டரா தான் இருக்கும். ஆனா எப்பிடி ரூம் போட்டு யோசிச்சு பாத்தாலும் இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் டீம், அவங்களோட எம்.எஸ்.தோனியைவிட பெட்டரா ஒன்னு இல்லப்பா. கொல்கத்தாவுக்கு காப்பு கட்டுனது தலைவர்னா, ஆப்பு வெச்சது தலதான்.” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை சென்னை அணியின் ரசிகர்களும் கிரிக்கெட் ஆர்வலர்களும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
நேற்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 235 ரன்கள் குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற பெருமையை பெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...