கடைசி ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற மே.இ.தீ. அணி பௌலிங் தேர்வு! 

இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் அணி மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தரௌபாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ.தீ.அணி பௌலிங்கினை தேர்வு செய்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்


இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் அணி மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தரௌபாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ.தீ.அணி பௌலிங்கினை தேர்வு செய்துள்ளது. 

மே.இ.தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து டெஸ்டினை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரினையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 1-1 என சம்நிலையில் உள்ள இந்த தொடருக்கு இது முக்கியமான போட்டியாக உள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் வரும்நிலையில் இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை தந்து பரிசோதனை செய்து வருகிறது திராவிட்- ரோஹித் தலைமையிலான இந்திய அணி. ரோஹித் சர்மா, கோலி ஆகியோருக்கு இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது

கடந்த 2006க்குப் பிறகு இந்திய அணி ஒருநாள் தொடரில் மே.இ.தீ. அணியிடம் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடைபெறும் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அணி: ஹர்திக் கேப்டன். ருதுராஜ், உனத்கட் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளார்கள். 

மே.இ.தீ.அணி: மாற்றமில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com