தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்த உலகக் கோப்பையை வெல்ல எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது: ரோஹித் சர்மா

இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அதிக அளவு ஆதரவு இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2023, 10:40 am

DIN

இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அதிக அளவு ஆதரவு இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

50 ஓவர் உலகக் கோப்பை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கி இந்தியாவில் 10 முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அதிக அளவு ஆதரவு இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதை நான் அருகிலிருந்து பார்த்ததே இல்லை. இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற போதும் நான் அணியில் விளையாடவில்லை. ஆனால், அது மிகவும் அழகான தருணம். உலகக் கோப்பை வெல்வதன் பின்னணியில் நிறைய நினைவுகள் இருக்கிறது. இந்தியாவில் நாங்கள் பயணிக்கும் ஒவ்வொரு மைதானத்திலும் எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என்பது எங்களுக்கு நிச்சயமாக தெரியும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு கடைசியாக  இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. நாங்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடி இருந்தோம். ஆனால், கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன்னதாக 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடியது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் உள்ளது என்றார்.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.