இந்திய அணியில் பின் வரிசையில் கடைசியில் நின்று ஆடுவதற்கான வீரர்களை சேர்க்க வேண்டுமென இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை 2-3 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகளிடம் இந்தியா இழந்தைதயடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் சென்னை வருகை!
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரையும் 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவைத் தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் இந்திய அணியால் அதிக அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 165 ரன்கள் மட்டுமே குவித்தது. தொடரைக் கைப்பற்றுவதற்கான முக்கிய போட்டியில் இந்திய அணி அதிக ரன்கள் சேகரிக்க முடியாததால் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், இந்திய அணியில் பின் வரிசையில் கடைசியில் நின்று ஆடுவதற்கான வீரர்களை சேர்க்க வேண்டுமென இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ரம்யா பாண்டியனின் சகோதரியை கரம்பிடிக்கும் அசோக் செல்வன்!
இது குறித்து அவர் பேசியதாவது: இந்திய அணியில் மாற்றம் செய்வதற்கான தேவை ஏற்படவில்லை என்பதாக நான் நினைக்கிறேன். ஆனால், அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சில இடங்களில் இந்திய அணி இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரினை உயர்த்தும் வீரர்களை அடையாளம் காண வேண்டும். இந்திய அணிக்கு அந்த விஷயம் சவாலானதாக இருக்கிறது. நாங்கள் எங்களது சிறப்பான பங்களிப்பை வழங்க விரும்புகிறோம். அணியில் பந்துவீச்சாளர்களை குறைத்தும் விளையாட முடியாது. இறுதிக் கட்டங்களில் சிறப்பாக விளையாடி ரன் குவிக்கும் வீரர்களை அடையாளம் காண்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமெரிக்க எரிபொருள் கட்டமைப்பு முழுமையாக அழிக்கப்படும்! ஈரான் சூளுரை

கிரெடிட் கார்டு விதிமுறைகளில் ஆர்பிஐ அதிரடி! மறைமுக வட்டி, அபராதங்களுக்கு செக்!

பால் உற்பத்தியாளா்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை கரூா் மாவட்ட ஆட்சியா்

ஈரான் புதிய தலைவர் பற்றிய தகவலுக்கு ரூ. 92 கோடி சன்மானம்! அமெரிக்கா
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

