தீவிர உடற்பயிற்சியில் விராட் கோலி: வைரல் விடியோ! 

தீவிர உடற்பயிற்சியில் விராட் கோலி: வைரல் விடியோ! 

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 
Published on

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 76 சதங்களை நிறைவு செய்துள்ளார். டெஸ்டில் 29, ஒருநாள் போட்டியில் 46, டி20யில் 1 என 76 சதங்கள் விளாசியுள்ளார். சச்சின் டெஸ்டில் 51, ஒருநாள் போட்டிகளில் 49 என மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசி முதலிடத்தில் இருக்கிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் வரிசையில் விராட் கோலி 2ஆம் இடத்தில் இருக்கிறார். மே.இ.தீ. அணியுடனான போட்டியில் கோலிக்கு வாய்ப்பு மறுக்கபடுகிறதென அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வரும் அக்.5ஆம் நாள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை மற்றும் ஆஸி. அணியுடன் 3 ஒருநாள் 5 டி20 போட்டிகளும் உள்ளன. 

இதற்காக தன்னை முழு வீச்சில் தயார் படுத்து வருகிறார் விராட் கோலி. மிகவும் ஃபிட்டான கிரிக்கெட் வீரகளில் விராட் கோலியும் ஒருவர். இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிற்கு சுமார் ரூ.11.5 கோடி வசூலிப்பதாக இணையத்தில் தகவல் வெளியானதை விராட் கோலி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தனது சமூக வலைதளத்தில் விராட் பகிர்ந்துள்ள உடற்பயிற்சி விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

டெஸ்டில் 8,676 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 12,898 ரன்களும் சர்வதேச டி20 போட்டிகளில் 4008 ரன்களும் எடுத்து அசத்தி வரும் விராட் கோலி இன்னும் பல சாதனைகளை படைப்பாரென ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com