ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த பாகிஸ்தான்!

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என வென்றது. இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது பாகிஸ்தான் அணி. 

ஏற்கனவே கடந்த மே மாதம் பாகிஸ்தான் அணி முதன்முதலாக ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தது. ஆனால் ஒரே நாளில் முதலிடத்தினை இழந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 

மேலும் பாபர் அசாம் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்திலும் இமாம் உல் ஹக் 3வது இடத்திலும் ஷுப்மன் கில் 4வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் வரும் நிலையில் இந்த தரவரிசை பட்டியல் முக்கியத்துவம் பெருகிறது. 

தற்போதய நிலவரப்படி ஒரு நாள் அணிக்கான ஐசிசி தரவரிசை: 

  1. பாகிஸ்தான் - 118 புள்ளிகள் 
  2. ஆஸ்திரேலியா - 118 புள்ளிகள் 
  3. இந்தியா - 113 புள்ளிகள் 
  4. நியூசிலாந்து - 104 புள்ளிகள் 
  5. இங்கிலாந்து - 101 புள்ளிகள் 
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com