இந்தியாவுடனான டி20: தென்னாப்பிரிக்கா வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் "டக்வொர்த் லீவிஸ்' முறையில் செவ்வாய்க்கிழமை வென்றது. 
இந்தியாவுடனான டி20: தென்னாப்பிரிக்கா வெற்றி


கெபெர்ஹா: இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் "டக்வொர்த் லீவிஸ்' முறையில் செவ்வாய்க்கிழமை வென்றது. 
இந்த டி20 தொடரின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், தற்போது 2-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா வென்று முன்னிலை பெற்றுள்ளது. 
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தபோது, மழையால் ஆட்டம் தடைப்பட, அணியின் இன்னிங்ஸ் அத்துடன் முடித்துக்கொள்ளப்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட, 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வென்றது அந்த அணி. 
முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். திலக் வர்மா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு வெளியேறினார். 
கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் இணைந்து, விக்கெட் சரிவைத் தடுத்து ஸ்கோரை உயர்த்தினர். இதில் சூர்யகுமார் 36 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 
தொடர்ந்து ஜிதேஷ் சர்மா 1, ரவீந்திர ஜடேஜா 19, அர்ஷ்தீப் சிங் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. ரிங்கு சிங் 39 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 68 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். 
தென்னாப்பிரிக்க பெளலிங்கில் ஜெரால்டு கோட்ஸீ 3, மார்கோ யான்சென், லிஸாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, எய்டன் மார்க்ரம் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 
பின்னர் தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் மேத்யூ பிரீட்ஸ்கே 16 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 27 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 49, கேப்டன் எய்டன் மார்க்ரம் 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்கள் விளாசி வீழ்ந்தனர். 
ஹென்ரிச் கிளாசென் 7, டேவிட் மில்லர் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இறுதியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 14, அண்டிலே ஃபெலுக்வயோ 10 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பெளலர்களில் முகேஷ் குமார் 2, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com