தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கேப்டன், துணைக் கேப்டனை அறிவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்துவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2023, 11:03 am

DIN

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்துவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை. இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நிதீஷ் ராணா வழிநடத்தினார். இந்த நிலையில், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறியதாவது: ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் அடுத்த சீசனில் அணியை கேப்டனாக வழிநடத்துவார். அணியின் துணைக் கேப்டனாக நிதீஷ் ராணா செயல்படுவார் என்றார்.

இந்த ஆண்டு நிதீஷ் ராணா தலைமையில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளிப்பட்டியலில்  7-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.