பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் வீரர்!
By IANS | Published On : 03rd February 2023 02:23 PM | Last Updated : 03rd February 2023 02:35 PM | அ+அ அ- |

பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் யாசிர் அராஃபத் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
40 வயது யாசிர் அராஃபத் பாகிஸ்தான் அணிக்காக 2000 முதல் 2012 வரை 3 டெஸ்டுகள், 11 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தற்போது, பாகிஸ்தான் அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக யாசிர் அராஃபத் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் இயக்குநராக மிக்கி ஆர்துர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். அவர் அணியில் இல்லாதபோது தற்காலிகப் பயிற்சியாளராக யாசிர் அராஃபத் செயல்படுவார் எனத் தெரிகிறது. இங்கிலாந்தின் கவுன்டி அணி மற்றும் ஹாங்காங் அணி ஆகியவற்றின் பயிற்சியாளராக யாசிர் அராஃபத் பணியாற்றியுள்ளார். இங்கிலாந்தில் லெவல் 4 பயிற்சியாளர் பாடத்திட்டத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
டெர்பிஷைர் அணியில் மிக்கி ஆர்துர் பணியாற்றி வருவதால் பாகிஸ்தான் அணியின் முழு நேரப் பயிற்சியாளராகப் பணியாற்றக் கூடிய வாய்ப்பை மறுத்து விட்டார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் இயக்குநராக நியமிக்கப்படவுள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை, பாகிஸ்தான் அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் ஆகியவற்றில் பாகிஸ்தான் அணிக்கு உறுதுணையாக மிக்கி ஆர்துர் இருப்பார் என்று கூறப்படுகிறது.