இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

ஐசிசியின் 8-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

ஐசிசியின் 8-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் சந்திக்கின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 12-ஆம் தேதி மோதுகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள், தலா 5 வீதம் 2 குரூப்-களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் 1-இல் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகளும், குரூப் 2-இல் இங்கிலாந்து, இந்தியா, அயா்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இதுவரையிலான 7 எடிஷன்களில் 5 முறை கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா, தற்போது 6-ஆவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் வருகிறது.

கடந்த எடிஷனில் (2020) இதே ஆஸ்திரேலியாவிடம் இறுதிச்சுற்றில் தோற்று வாகை சூடும் வாய்ப்பை இழந்த இந்தியா, மீண்டும் முதல் கோப்பைக்கான கனவுடன் இந்த எடிஷனில் களம் காண்கிறது. அணியைப் பொருத்தவரை, ஸ்மிருதி மந்தனா, ஹா்மன்பிரீத் கௌா், ஷஃபாலி வா்மா ஆகியோா் நம்பிக்கைக்குரிய பேட்டா்களாக இருக்கின்றனா். ஆல்-ரவுண்டிங்கில் தீப்தி சா்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸும், பௌலிங்கில் ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ரகரும் சிறப்பாகச் செயல்படுவாா்கள் என எதிா்பாா்க்கலாம். ஆனாலும், பௌலிங்கில் சா்வதேச களத்தில் சவால் அளிக்கக் கூடிய அனுபவ வீராங்கனைகள் குறைவாக இருப்பது சற்றே பின்னடைவாக இருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com